Monday, April 27, 2015

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கும் வழி "நிலம் கையக மசோதா"


 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கும் வழி "நிலம் கையக மசோதா" முனைவர் செ.வீர அழகிரி.

ஆதனூர் வேதாரண்யம் ஏப்- 27;
 நிலம் கையக மசோதாவுக்கு இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வளர்களும் ஏன் பா.ஜ.கவின் தோழமை கட்சிகளிலும் கூட எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மக்களின் நலனில் அக்கரை கொண்டு மக்களுக்கான ஆட்சி நடத்தும் மத்திய அரசு, ஏன் விவசாயிகளுக்கு எதிரான விரோதமான செயலை செய்கிறது என்பது புலப்படவில்லை. இந்தியாவிலுள்ள 95% மக்கள் நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஏன் யாருக்காக நிறைவெற்ற வேண்டுமென துடிக்கிறது என்பதன் காரணம் தான் புரியவில்லை.

மேலும், மத்திய அரசு விவசாயிகளையே குறிவைத்து தாக்குகிறது. 4% வட்டிக்கு பயிர்கடன் பெற்று வந்த விவசாயிக்கு 7% வட்டியும். வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 9% பயிர்கடனை தற்போது  11 சதவீதமாக உயர்த்தியது வண்மையாக கண்டிக்கத்தக்கது .

மத்திய அரசு, நிலம் கையக மசோதாவை திரும்ப பெறவேண்டும். கைவிடப்பட வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவிலுள்ள அனைத்து விவசாயிகள், விவசாயம் சார்ந்த சாதரண எழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அனைவரும் 1947 க்கு முன் ஆங்கிலய கம்பேனிக்கு அடிமையாக இருந்தது போல வரும் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதான். 

1991ஆம் ஆண்டு பி. வி. நரசிம்ம ராவ் பிரதமரான பின்னர் 1994 இல் காங்கிரஸ் அரசு “காட் ஒப்பந்தம்’ என்ற அடிமைச்சாசனத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து "நாடு மீண்டும் அடிமையாகிறது” என்ற உண்மையை தமிழக மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுத்துச் சென்று அரசியல் விழிப்புணர்வூட்ட வேண்டியுள்ளது. 

அமெரிக்காவின் பெப்ஸி கோகோகோலா நிறுவனங்களின் பூச்சி மருந்து குளிர்பானங்கள் நமது நாட்டில் தங்கு தடையில்லாமல் நாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருவதே இதற்கு போதுமான உதாரணமாகும்.
 
இந்த ஆபத்துகளைக் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது இது காட் ஒப்பந்தம் போலவும், டங்கல் திட்டம் போலவும் அந்நிய முதிலீடு குறித்த முடிவும், அதே போல நிலம் கையக மசோதாவும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். 

காட் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள சில கோரிக்கைகளைத்தான்  தற்போது மத்திய அரசு நிறைவேற்றுகிறது என நினைக்கிறேன். அரசு உடைமைகள் அனைத்தும் உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம், தாரளமயமாக்கம் என்ற நோக்கில் வரவேண்டும். மீண்டும் இந்தியா அடிமையாக இருக்க வேண்டும் என்பதுதான்  காட் ஒப்பந்தத்தின் தலையாய நோக்கம் என்றார் ASWET அறக்கட்டளை நிறுவனர் முனைவர் செ.வீர அழகிரி.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home