தேர்வில் வெற்றி பெற்ற மாணவகளுக்கு கலந்தாய்வு இல்லாமல் நேரடிச் சேர்க்கை: முனைவர் செ.வீரஅழகிரி அறிக்கை
ஆதனூர்,
வேதாரண்யம். ஏப் 27-
ஆதனூர்
அறிவரசி சமூகநல கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் செ.வீரஅழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;-
அறிவரசி
சமுகநல கல்வி அறக்கட்டளையின் மூலம் நமது பகுதி மாணவ மாணவியர், இளைஞர்கள், அரசு வேலை
பெற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் I, II, III IV
ஆகிய தேர்வுகளுக்கு மாபெரும் இலவசப் பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில்
காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சுந்தரேச விலாஸ் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில்
மிக சிறப்பாக நடத்தி வருகிறோம்.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்
IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான நுழைவுத்
தேர்வு கடந்த 05–04-2015 தேதியன்று சி.க.சுப்பையா அரசு மேனிலைப்பள்ளியில் நடத்தப்பட்டு
மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கலந்தாய்வுக்கு வர அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது, தற்போது சில மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வு எழுதுவதாலும்,
அரசாங்க ஆய்வக உதவியாளர்கள் (Lap Assistant) பணி
நியமிக்கப்படவுள்ளது. அதற்கு சில மாணவர்கள் ஆயத்தமாவதாலும் மாணவர்களின் நலன் கருதி இரண்டாமாண்டு பயிற்சி வகுப்பிற்கான தேதி
மாற்றம் செய்யப்பட்டு 07–06–2015 தேதியன்று வகுப்புகள் தொடங்குவதெனவும் தேர்வில் வெற்றி பெற்ற
அனைவருக்கும் கலந்தாய்வு இல்லாமல் பயிற்சி வகுப்பில் நேரடிச் சேர்க்கை நடைபெறுமெனவும் ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது
எனத் தெரிவித்தார்.